முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
சீர்காழி பகுதியில் ஜனவரி 5 மின் தடை
By DIN | Published On : 04th January 2019 08:38 AM | Last Updated : 04th January 2019 08:38 AM | அ+அ அ- |

சீர்காழி பகுதியில் சனிக்கிழமை (ஜன.5) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) சு. சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில், அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால், இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், எருக்கூர், மாதிரவேளூர், வடரெங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், மகேந்திரப்பள்ளி, பழையாறு, புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், மாங்கணாம்பட்டு, ஆச்சாள்புரம், அரசூர் மற்றும் இந்த பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.