Enable Javscript for better performance
மயிலாடுதுறை சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற 10, 11-இல் தகுதித் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற 10, 11-இல் தகுதித் தேர்வு

    By DIN  |   Published on : 08th January 2019 09:26 AM  |   அ+அ அ-   |    |  

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ராஜீவ் காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறத் தகுதியானோரைத் தெரிவு செய்வதற்கான தகுதித் தேர்வு ஜன. 10, 11-ஆம்  தேதிகளில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் ராஜீவ் காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறுவதற்குத் தகுதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தகுதித் தேர்வு ஜன. 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
    தடகளம், கையுந்து பந்து, கபடி ஆகிய விளையாட்டுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும். கூடைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய விளையாட்டுகளில் பெண்களுக்கும், பளுதூக்குதலில் ஆண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். தங்குமிட வசதியுடன் கூடிய பயிற்சி மற்றும் தங்கும் வசதியில்லாத பயிற்சி என  இருவகைகளில் இங்கு பயிற்சி அளிக்கப்படும். 
    இம்மையத்தில் தங்கி பயிற்சி பெறுவோருக்கு, தகுதி மற்றும் அனுபவம் நிறைந்த பயிற்றுநர்கள் மூலம் தினமும் திட்டமிட்ட, விஞ்ஞான ரீதியான பயிற்சிகள் அளிக்கப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ. 225-க்கு உணவு வழங்கப்படும். விளையாட்டு உபகரணங்கள், போட்டிக்கான செலவினங்கள், கல்விச் செலவினங்கள், விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு, மருத்துவச் செலவுக்கு ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் ஒதுக்கீடு வழங்கப்படும். 
    தங்கி பயிற்சி பெறாமல், வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறுபவர்களுக்கு,  ஓராண்டில் 10 மாதங்களுக்கு ரூ. 600 வீதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், போட்டிக்கான செலவுத் தொகையாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படும். 
    தனிநபர் விளையாட்டுகளில் 2017- 18, 2018- 19-ஆம் ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பெற்றவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் முதல் 6 இடங்களைப் பெற்றவர்கள், மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள், மாவட்ட அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்றவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.
    குழு விளையாட்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்றவர்கள், மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், மாவட்ட அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்றவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.
    தகுதித் தேர்வில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மருத்துவச் சான்று உண்மை நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விளையாட்டுச் சான்றுகள், பிறப்புச் சான்று ஆகியவற்றின் நகலுடன், கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற நன்னடத்தைச் சான்று மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை ஜன. 10-ஆம் தேதி காலை 8 மணி அளவில் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் சான்றொப்பமிடப்பட்டவையாக இருக்க வேண்டும்.
    இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை சிறப்பு சரக விளையாட்டு மையத்தை 04364- 240090, 94431 48765 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp