சுடச்சுட

    

    ஜன. 16, 21, 26 தேதிகளில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்

    By DIN  |   Published on : 12th January 2019 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி,  ஜன. 16,  21, 26  ஆகிய தேதிகளில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இந்த அறிவுறுத்தலை அனைத்து வகையான மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும்,  அறிவுறுத்தலை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது  மதுபான சட்ட விதிமுறைகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில்
    தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai