சுடச்சுட

  

  நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   நீதித் துறை சார்பில்  நாகை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு நாகை மாவட்ட நீதிபதி பத்மநாபன் தலைமை வகித்தார். முதன்மை குற்றவியல் நீதிபதி மணிவண்ணன், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகள் மணிகண்டராஜ், சீனிவாசன், உரிமையியல் நீதிபதி புவியரசு, வழக்குரைஞர் சங்கத் தலைவர் நடேச. ஜெயராமன், செயலாளர் டி.ஆர். பாண்டியன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். நீதிமன்ற வளாகத்தில் பொங்கலிட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
  மாணவர்களுக்குப் புத்தாடை
  வேதாரண்யம், ஜன.11: வேதாரண்யம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ( இந்து ) பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  இந்த விழாவில் திருநெல்வேலி ஷாலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி இராஜசிங்,  வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிவக்குமார், தாமோதரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாகூரான், சக்தி பிரியா நிறுவனங்களின் உரிமையாளர் ஆறுமுகம், தலைமையாசிரியர் கவிஞர் புயல் சுகுமார், இணைச் செயலாளர் செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
  விழாவில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொங்கல் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், இவ்விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. அத்துடன், அனைத்து மாணவர்களுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai