சுடச்சுட

  

  பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
  மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையகங்களில் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வணிகர்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
  பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணியிலான கைப்பைகளை வழங்கினார். அப்போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர். ராமசுப்பு, நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai