பொறியியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா

திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தேசிய வாக்காளர் தின விழா சிறப்புப் போட்டிகள் நடைபெற்றன. 

திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தேசிய வாக்காளர் தின விழா சிறப்புப் போட்டிகள் நடைபெற்றன. 
நாட்டின் 9-ஆவது தேசிய வாக்காளர் தினம் ஜன. 25-ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், வாக்காளர் சேர்க்கை மற்றும் வாக்களித்தலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு முன்னதாகவே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான போட்டிகள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 
விழாவில், கல்லூரி புலமுதல்வர் எம். துரைராசன், வட்டாட்சியர் ஸ்ரீதேவி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ். கணேஷ்குமார், பேராசிரியர்கள் எஸ். ராம்பிரகாஷ், எஸ்.வி. விஜயபாபு, நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வாக்களித்தலின் அவசியம் குறித்து போட்டிகள் மூலம் விளக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com