மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: 260 பேர் பங்கேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாகையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாகையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் 260 பேர் பங்கேற்றனர்.
மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, ஓட்டப் போட்டி, சக்கர நாற்காலி ஓட்டப் போட்டி, பந்து எறிதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள், வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில், மாற்றுத் திறனாளிகள் 260 பேர் பங்கேற்றனர்.
நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா. சிவா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com