சுடச்சுட

  

  திருமருகலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சனிக்கிழமை சந்தித்து பேசினர். 
  இப்பள்ளியில் வரும் 18-ஆம் தேதி பொன் விழா நடைபெறுகிறது. இதையொட்டி, முன்னாள் மாணவர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.
  நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். இப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்களின் சார்பில், சுமார் ரூ. 25 லட்சம் செலவில் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தி வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசுதல், டைல்ஸ் பதித்தல், மின் இணைப்பு பழுதுபார்த்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்துவது, பொன் விழா வளைவு அமைத்தல் ஆகிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
  தலைமை ஆசிரியர் நிர்மலா ராணி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தின் செயலாளர் மணி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai