சுடச்சுட

  

  ஏ.வி.சி. கல்லூரியில் தமிழ்த் திரைப்பட திறனாய்வு நிகழ்ச்சி

  By DIN  |   Published on : 13th January 2019 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், தமிழாய்வுத்துறை, கட்புலத்துறை சார்பில், தமிழ்த் திரைப்பட திறனாய்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  காலை அமர்வில் தமிழாய்வுத்துறைத் தலைவரும், நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான சு. தமிழ்வேலு நோக்கவுரையாற்றினார். பின்னர், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் நடைபெற்ற திறனாய்வு நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வர் இரா. நாகராஜன் தலைமை வகித்தார். தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் த. செபாஸ்தி ஜான் பாஸ்கர் திரைமொழி என்ற பொருளில் திரைப்படத்தின் அம்சங்களை எடுத்துரைத்தார்.
  காட்சியமைப்பு என்னும் பொருளில் கட்புலத்துறைத் தலைவர் ச.தி. சங்கர் திரைப்படத்தின் நிறைகுறைகளை எடுத்துக்கூறி, இத்திரைப்பட காட்சியமைப்பின் நுணுக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 
  பின்னர், தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் செல்வ. கனிமொழி தமிழரின் அடையாளங்கள் என்ற தலைப்பில் திரைப்படத்தின் வழியாக கிராமத்தின் கூறுகளையும், அதைத் தொலைத்துவரும் இன்றைய தலைமுறையினரின் வாழ்வு குறித்தும் எடுத்துரைத்ததோடு, அருகிவரும் நம் மரபைக் காப்பாற்ற இதுபோன்ற திரைப்படங்கள் துணைச்செய்யும் என்று புகழாரம் சூட்டினார்.
  இறுதியாக ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா சிறப்புரையாற்றினார். கட்புலத்துறை உதவிப் பேராசிரியர் ரெ.மு. சுந்தர்ராஜன் வரவேற்றார். தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் க. பாலமுருகன் நன்றி கூறினார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai