சுடச்சுட

  


  சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கித் தலைவர்கள் பக்கிரிசாமி, போகர்.ரவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி பங்கேற்று 237 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினர். இந்நிகழ்ச்சியில், அதிமுக பொறுப்பாளர்கள் மணி, மலையப்பன், சுரேஷ், விஜி ஆகியோர் பங்கேற்றனர்.
  குத்தாலத்தில்...
  குத்தாலம், ஜன. 12 : குத்தாலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 311 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டப் பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் அருள்மொழி தலைமை வகித்தார். பள்ளிக் கல்விக்குழுத் தலைவர் எம்.சி. பாலு முன்னிலை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள் என். ரத்தினம், ஜெயபாலகிருஷ்ணன், மணிவாசகம், கண்ணையன், மணிசுந்தர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai