சுடச்சுட

  


  வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி. பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சென்னை டி.வி.எஸ். நிறுவனம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
  இதில், பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிக்கும் மாணவ, மாணவிகள் 256 பேர் கலந்துகொண்டனர். இவர்களிடம் சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி அண்ணாமலை தனது குழுவினருடன் நேர்காணல் செய்தனர். தேர்வு பெற்ற 177 மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 
  பணிநியமன ஆணைகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜூ, பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் யோகானந்த், பொறியியல் கல்லூரி முதல்வர் பாலமுருகன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பக்கிரிசாமி மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
  நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் நிறுவனர் ஆர். வரதராஜன் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் ஆர்.வி. செந்தில் முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு அலுவலர் முகமது பைசல் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai