சுடச்சுட

  

  தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13-ஆம் பேராயருக்கு நாளை பட்டாபிஷேகம்

  By DIN  |   Published on : 13th January 2019 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13-ஆவது பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ள டேனியல் ஜெயராஜ் ஆயருக்கு திங்கள்கிழமை (ஜன.14) பட்டாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
  நாகை மாவட்டம், தரங்கம்பாடியை தலைமையிடமாகக்கொண்டு 1919-இல் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை உருவானது. இதன் முதல் பிஷப்பாக எர்னஸ்ட் ஹைமன் என்பவர் 1921 முதல் 1926 வரை பொறுப்பு வகித்தார்.
  இந்த சபையில் இதுவரை 12 பேராயர்கள் பதவி வகித்துள்ளனர். தற்போது, 13-ஆவது பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைதிரு. டேனியல் ஜெயராஜிக்கு உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும் திருச்சபையின் நிர்வாகியுமான வெங்கட்ராமனின் முன்னிலையில் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் திங்கள்கிழமை பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
  இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவ திருச்சபைகளின் பேராயர்கள், ஆயர்கள், பிரதிநிதிகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பொறியாளர் தியாகராஜன், பேராசிரியர் ஜான்சன் ஜெயக்குமார், ஆயர் நவராஜ் ஆபிரகாம், த.பே.மா.லு. கல்லூரியின் முதல்வர் ஜீன் ஜார்ஜ், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai