சுடச்சுட

  

  திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

  By DIN  |   Published on : 13th January 2019 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருவெண்காடு அருகே உள்ள திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயிலில் கூடாரவல்லியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  கூடாரவல்லியையொட்டி, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய உத்ஸவர் வயலாளி மணவாள பெருமாள், குமுதவல்லி நாச்சியாருடன் கூடிய திருமங்கையாழ்வார், அமிர்வல்லி தாயார், ஆண்டாள் ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
  பட்டாச்சாரியார் குழுவினர் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாடல்களைப் பாடினர். இதையடுத்து, உலக நன்மைக்காகவும், உலகில் பக்தி தழைத்தோங்கவும் இயற்கை இடர்பாடுகள் குறையவும் வேண்டி, அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அர்ச்சனை செய்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai