சுடச்சுட

  


  பூம்புகார் அடைக்கலபுரத்தில் அமைந்துள்ள தேவாலயத்தின் விரிவுபடுத்தப்பட்ட தேவாலய சபைக் கூடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
  அடைக்கலபுரத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விஷேச நாள்களில் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனிடையே, பக்தர்களின் வசதிக்காக ஆலயத்தின் வழிபாடு நடத்தும் கூடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை தரங்கம்பாடி லுத்தரன் சபையின் மணிக்கிராமம் தேவாலய சபைகுரு டேனியல் இளவரசன் திறந்துவைத்தார். இதில், ஆலய பொறுப்பாளர்கள் மெக்லீன்ராஜ், சாராள் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai