சுடச்சுட

  

  மயிலாடுதுறை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். 
  தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (65) மகள் கிறிஸ்டி சசிலா ஜாக்குலினுக்கும் (34), மணல்மேடு அருகே குறிச்சி, நடுத்தெருவைச் சேர்ந்த ஜான் ஜெயசீலன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
  இந்தநிலையில், கிறிஸ்டி சசிலா ஜாக்குலினை வேலைக்கு போகச்சொல்லி, அவரது கணவர் ஜான் ஜெயசீலன், மாமியார், மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் கில்பர்ட் ஆகியோர் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், கிறிஸ்டி சசிலா ஜாக்குலின் விஷத்தை குடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், வேலைக்கு போகச்சொல்லி கட்டாயப்படுத்தியதாலேயே தனது மகள் இறந்ததாகவும், அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்வராஜ் மணல்மேடு உதவி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் புகார் அளித்தார். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai