சுடச்சுட

  

  மயிலாடுதுறை கோட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

  By DIN  |   Published on : 13th January 2019 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மயிலாடுதுறை கோட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. 
  மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில், சுமார் 1.70 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளனர். 
  தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
  இதன்பேரில், மயிலாடுதுறை கோட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
  மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் திருமங்கலம், இளந்தோப்பு, கொற்கை, பாண்டூர், குறிச்சி, மறையூர், மணல்மேடு ஆகிய 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
  அந்த வகையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், கே.எம்.எஸ். 2018-19 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.
  நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளர் (கணக்கு) செந்தில்குமார், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) ஜி. முத்தையன், கண்காணிப்பாளர் செல்வராஜ், பட்டியல் எழுத்தர் டி. சுதாகர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai