சுடச்சுட

  


  சபரிமலை பிரச்னை தொடர்பாக, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  சபரிமலை பிரச்னையை பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதாகக் கூறி, அந்த அமைப்புகளைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. 
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி. முருகையன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
  கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி, மாநிலக் குழு உறுப்பினர் வி. மாரிமுத்து ஆகியோர் போராட்ட நோக்கத்தை விளக்கிப் பேசினர்.
  கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. சீனிவாசன், ஜி. ஸ்டாலின், சி.வி.ஆர். ஜீவானந்தம், ஏ.வி. சிங்காரவேலன் மற்றும் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai