சுடச்சுட

  


  சீர்காழியை அடுத்த அண்ணன்பெருமாள்கோயில் கிராமத்தில் சுவாமி விவேகானந்தரின் 156-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு, சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தலைமை வகித்தார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் பாலாஜி, இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன், அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, விவேகானந்தரின் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஜில்லா சேவா நிர்வாகி மதிவாணன், கோ சேவா நிர்வாகி கோவிந்தராஜன், விசுவ இந்து பரிஷத் மாவட்டத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai