புயல் பாதித்தப் பகுதியில் மரக்கன்றுகள் வழங்கும் பணி

வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மரங்களை வளர்க்கும் வகையில் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 

வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மரங்களை வளர்க்கும் வகையில் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 
வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மர வளங்களை மீண்டும் உருவாக்கும் வகையில், திருச்சி பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளையினர் கிராம மக்களுக்கு மா, இழுப்பை, மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கினர். தொடர்ந்து, கால்நடைகளுக்கு தீவனங்கள் அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது. கடிநெல்வயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் தமிழழகன் தலைமை வகித்தார். திருச்சி பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் குமரகுரு விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் அளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். அறக்கட்டளையின் பெங்களூர் பொறுப்பாளர் சுதா, இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com