மதுவிலக்குக் குற்றங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 30-இல் ஏலம்
By DIN | Published On : 29th January 2019 04:05 AM | Last Updated : 29th January 2019 04:05 AM | அ+அ அ- |

மதுவிலக்குக் குற்றங்களின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜன. 30-ஆம் தேதி நாகையில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் மதுவிலக்குக் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 60 இருசக்கர வாகனங்கள், நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் ஜன. 30-ஆம் தேதி பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. வாகனங்களை ஏலத்தில் வாங்க விரும்புவோர் ஜன. 29- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் வாகனங்களை நேரில் பார்வையிடலாம்.
ஏலத்தில் பங்கேற்பவர்கள், ஜன. 30-ஆம் தேதி காலை 8 முதல் 9 மணிக்குள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04365 - 247430 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.