6-இல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 01st July 2019 07:11 AM | Last Updated : 01st July 2019 07:11 AM | அ+அ அ- |

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறையில் ஜூலை 6- ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம், அந்த அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்டத் தலைவர் ஏ. பஹ்ருதின் தலைமை வகித்தார்.
தீர்மானங்கள்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடச் சொல்லி தப்ரேஸ் அன்சாரியை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்தும் ஜூலை 6- ஆம் தேதி மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஜமாஅத் சார்பில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களும் தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.