சுடச்சுட

  

  சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண வட்டார வளர்ச்சி அலுவலர்  திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார். 
  சட்டநாதபுரம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நிலத்தடிநீர் உப்பு நீராக மாறியதால் குடிநீர்த் தட்டுபாடு  நிலவிவருகிறது. 
  இதனால், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் சட்டநாதபுரம் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என அண்மையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  இதைத்தொடர்ந்து, சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் சட்டநாதபுரம் ஊராட்சியில் நேரில்  ஆய்வு செய்தார். அப்போது, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் ஊராட்சிக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரை மனோன்மணீயம் நகரில் அமைந்துள்ள கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் சேகரித்து, சுத்திகரித்து பின்னர் கேவிஎஸ் நகரில் உள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைநீர்த் தேக்கத் தொட்டியில் ஏற்றி, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாராணி, கூட்டுக் குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai