சுடச்சுட

    

    நாகையில், பெண் ஒருவர் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
    நாகை அக்கரைப்பேட்டை புதிய மீன்பிடி துறைமுகத்தின் மேற்குப் பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 70 வயதிருக்கும். பெயர், ஊர் தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து, வடக்குப் பொய்கைநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் எஸ்.வீரமணி அளித்தப் புகாரின் பேரில், நாகை நகர காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai