சுடச்சுட

    

    சீர்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    சீர்காழி அருகே உள்ள கடவாசல் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரெ. மாரியப்பன் (56). 
    இவர், முன்பு வெளிநாட்டில் வேலைப் பார்த்துவிட்டு, சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    இந்நிலையில், மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்மருவத்தூர் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வீடுக்குத் திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பன், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த  4 பவுன் நகைள் மற்றும் ரூ. 2 லட்சம் பணம் உள்ளிட்ட சில பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்து, புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai