சாலை மேம்பாட்டுப் பணி: ஆட்சியர் ஆய்வு

நாகை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகளை

நாகை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து வேதாரண்யம் வரையிலான பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பில் நடைபெறும்,  நெடுஞ்சாலைத் துறை சாலை மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ரூ. 8 லட்சம் மதிப்பில் வேளாங்கண்ணி - வேதாரண்யம் சாலையில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணி, ரூ. 90 லட்சம் மதிப்பில் செங்காதலை - வேதாரண்யம் சாலையில் நடைபெறும் பாலம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள்,  செங்காதலை - வேதாரண்யம் சாலையில் ரூ. 55 லட்சம் மதிப்பில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, தலைஞாயிறு - அவரிக்காடு பாலம் அமைக்கும் பணி, புத்தூர் ரவுண்டானா ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது, பணிகளை உரிய தரத்தில், உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும், அலுவலர்கள் பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் சுரேஷ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com