மின்மாற்றியில் ஏறிய ஒப்பந்த தொழிலாளி சாவு
By DIN | Published On : 05th July 2019 07:32 AM | Last Updated : 05th July 2019 07:32 AM | அ+அ அ- |

குத்தாலம் அருகே புதன்கிழமை மின்மாற்றியில் ஏறிய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
குத்தாலம் அருகேயுள்ள பெருஞ்சேரியைச் சேர்ந்தவர் பழநி மகன் கணேஷ் (20). இவர், தமிழ்நாடு மின்வாரியம் நாகை கோட்டம் கிளியனூர் பிரிவில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், புதன்கிழமை அகரஆதனூர் எனும் இடத்தில் மின்சார மாற்றியில் பழுதை சரி செய்ய ஏறியுள்ளார். அப்போது, அங்கிருந்த மின் கம்பியை தொட்ட போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதில், உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலின்பேரில் பெரம்பூர் போலீஸார் அங்கு சென்று கணேஷின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.