குதம்பைச் சித்தர் விசாக நட்சத்திர வழிபாடு
By DIN | Published on : 13th July 2019 08:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் குதம்பைச் சித்தருக்கு, ஆனி மாத விசாக நட்சத்திர வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, குதம்பைச் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னம்பாலிப்பு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம.சேயோன் செய்திருந்தார். இதில் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.