சுடச்சுட

  

  சீர்காழி அருகே வடிகால் வாய்க்கால் மதகிலிருந்து தவறி விழுந்த கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
  கொள்ளிடம் அருகே உள்ள சின்ன குத்தவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (48). வாடகை கார் ஓட்டுநரான இவர், கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையின் குறுக்கே உள்ள அழிஞ்சியாறு கதவணை மதகில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
  அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் 40 அடி பள்ளத்தில் உள்ள சிமெண்ட் கான்கிரீட் தளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மூர்த்தி நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தார். இதுகுறித்து, கொள்ளிடம் போலீஸார் 
  வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai