குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்ட முயற்சி

நாகை மாவட்டம், சோழவித்தியாபுரத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

நாகை மாவட்டம், சோழவித்தியாபுரத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட வெள்ளிக்கிழமை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க டேங்கர் லாரிகள் மூலம் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்க வேண்டும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும், சோழவித்தியாபுரம் வடக்குத் தெருவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும், குளங்கள், ஏரிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சோழவித்தியாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, கட்சியின் கிளைச் செயலாளர் எம். தன்ராஜ், ஒன்றியச் செயலாளர் எம். முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர் கே. கிருஷ்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே. சித்தார்த்தன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை காலை முயற்சிகளை மேற்கொண்டனர். இதுகுறித்துத் தகவலறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜூ, மீனா ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற உறுதியளித்ததன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com