சேந்தங்குடி கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை சேந்தங்குடி, வள்ளாலகரம் வள்ளுவர் தெருவில் உள்ள நாகாத்தம்மன், சித்தி விநாயகர், பாலமுருகன்

மயிலாடுதுறை சேந்தங்குடி, வள்ளாலகரம் வள்ளுவர் தெருவில் உள்ள நாகாத்தம்மன், சித்தி விநாயகர், பாலமுருகன் கோயில்களில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, வியாழக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய விழாவில், அன்று மாலையில் முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையின் நிறைவில், மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், சிவாச்சாரியார்கள் கடங்களைத் தலையில் சுமந்து, கோயிலைச் சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, விமான குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. ஜி. கணபதி சுப்ரமணிய சிவாச்சாரியார், டி. சுரேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் சர்வசாதகம் செய்து வைத்தனர். இதில், சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகி ஸ்ரீலஸ்ரீ வீரராகவ சுவாமிகள், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com