மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்கள் தாக்குதல்: தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம்

சீர்காழி அருகே மக்காச்சோளப் பயிரில் படைப் புழுக்களால் பாதிப்பு ஏற்படாமலிருக்க தடுப்பு நடவடிக்கை

சீர்காழி அருகே மக்காச்சோளப் பயிரில் படைப் புழுக்களால் பாதிப்பு ஏற்படாமலிருக்க தடுப்பு நடவடிக்கை குறித்து வேளாண் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பயிரை அண்மையில்  நேரில் பார்வையிட்டு விளக்கமளித்தனர்.
 கொள்ளிடம் அருகே உள்ள கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள சாமியம் கிராமத்தில் விவசாயி ஒருவரது வயலில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுக்களின் தாக்குதல் ஏற்பட்டிருப்பது குறித்து வேளாண் அலுவலர்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன், வேளாண் அலுவலர் விவேக், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ராஜா ரமேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
அப்போது, மக்காச் சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்கியிருப்பதை உறுதி செய்தனர்.  தொடர்ந்து, அங்குள்ள விவசாயிகளிடம் படைப்புழுக்களை தடுக்கும் நடவடிக்கை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. பின்னர், வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் கூறும்போது, "நிலத்தை ஆழமான உழவு செய்தல் மற்றும் மண்ணில் வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நேர்த்தி செய்தல், போதிய பயிர் இடைவெளியில் வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்து, இனக்கவர்ச்சி பொறிகள் வைத்தல், மக்காச்சோளம் விதைக்கும் போது ஊடுபயிர் பயிரிடுதல் , பயிர் சுழற்சியை முறையாகப் பின்பற்றுதல், உயிரியல் பூச்சிக்கொல்லி தெளித்தல் உள்ளிட்டவைகளை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே அமெரிக்கன் படைப்புழுக்களை முற்றிலும் கட்டுப்படுத்தி அழிக்கலாம்' என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com