சுடச்சுட

  


  கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசைக் கலைக்க குதிரை பேரம் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் எஸ். ராஜகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் பி.ஜி.பத்மநாபன், பி.எஸ்.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உத்தமன், சிவப்பிரகாசம், மாவட்டச் செயலாளர்கள் முத்து சாமிநாதன், மிலிட்டரி செல்வராஜன், ஹாஜி, கணிவண்ணன், செந்தில், மதிவாணன், நவாஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.ராமானுஜம் வரவேற்றார்.
  ஆர்ப்பாட்டத்தில், வட்டாரத் தலைவர்கள் மணி, ஞானசம்பந்தம், பாலகுரு, பாலு, லெட்சுமணன், நடராஜன், சூர்யா, அன்பழகன், ராஜேந்திரன், வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai