சுடச்சுட

  


  திருமருகல் வட்டார விவசாயிகள் குறுவை பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க. சிவக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், 2019-ஆம் ஆண்டில் தமிழகத்தில் காரீப், குறுவை, சொர்ணவாரி நெற்பயிர் மற்றும் இதர காரீப் பருவப் பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  அதன்படி, நாகை மாவட்டத்தில் குறுவை நெற்பயிருக்கு 331 வருவாய் கிராமங்கள், விவசாய காப்பீட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு
   செய்யப்படுவர். 
  கடன் பெறா விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம். குறுவை பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதி. எனவே விவசாயிகள் தங்கள் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தொகையை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 620  காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக்கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai