சுடச்சுட

  


  திருவெண்காடு அருகே உள்ள கீழசட்டநாதபுரம் கம்பகாமாட்சி அம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடந்தது.
  இதையொட்டி, காவிரி கரையிலிருந்து பக்தர்கள் பால்காவடி, அலகுகாவடி, தீச்சட்டி ஆகியவற்றை மேளதாளம் முழங்கிட எடுத்து வந்தனர். பின்னர், கோயிலின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். திருவெண்காடு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai