சுடச்சுட

  

  மாங்கனித் திருவிழா: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th July 2019 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  காரைக்கால் மாங்கனித் திருவிழாவையொட்டி நாகப்பட்டினம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
   63 நாயன்மார்களில் புனிதவதியார் என்று அழைக்கப்படும் காரைக்கால் அம்மையாரும் ஒருவர். நிகழாண்டு காரைக்கால் அம்மையால் கோயிலில் மாங்கனித் திருவிழா சனிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் காரைக்கால் மட்டுமன்றி அதை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாகை, தரங்கம்பாடி தாலுகாக்களை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்வது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு ஜூலை 16-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai