செப். 19-ஆம் தேதிக்குள் புதிய வாடகை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்: சார் ஆட்சியர் 

தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் சட்டப்படி, வரும் செப்டம்பர் 19-ஆம்


தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் சட்டப்படி, வரும் செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் நில உரிமையாளர்கள் அல்லது வாடகைதாரர்கள் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் சட்டம்- 2017 மற்றும் விதிகள் - 2019,  நிகழாண்டின் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 
நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட நாகை, வேதாரண்யம் நகராட்சிப் பகுதிகள் மற்றும் திட்டச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய பேரூராட்சிப் பகுதிகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தும். 
இந்தச் சட்டப்படி பிப்ரவரி 22-ஆம் தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், குத்தகை உரிமை குறித்து எழுத்துவடிவிலான புதிய வாடகை ஒப்பந்தத்தை நில உரிமையாளர்கள் அல்லது வாடகைதாரர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்தக் காலக் கெடு செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள நில உரிமையாளர்கள் அல்லது வாடகைதாரர்கள், தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் சட்டப்படி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, வாடகை அமைப்பு அதிகாரியான நாகை சார் ஆட்சியருக்கு அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com