திறன் மேம்பாட்டுப் பயிற்சி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் திண்டிவனம் செசி நிறுவனம், தலித் விடுதலைக்கான

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் திண்டிவனம் செசி நிறுவனம், தலித் விடுதலைக்கான மாற்று முண்ணனி ஆகியவை சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் அகில இந்திய தலித் கிறிஸ்தவ தலைவர் வின்சென்ட் மனோகரன், செசி நிறுவனத்தின் கருத்தபாண்டியன், வீசா நிறுவனத்தின் சுந்தர், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகி செந்தில் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததைக் கண்டித்தும், அனைவருக்கும் 400 சதுர அடியில் பாதுகாப்பான கான்கிரீட் வீடு, கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா, தலித் குடியிருப்புப் பகுதியில் பேரிடர் காலங்களில் தங்கிக் கொள்ள பாதுகாப்பு இல்லம் அமைக்க வலியுறுத்தி ஜூலை 30-இல் நாகையில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com