Enable Javscript for better performance
ஆண் செவிலியர் மீது தாக்குதல்: மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆண் செவிலியர் மீது தாக்குதல்: மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த ஆண் செவிலியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, செவிலியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மயிலாடுதுறை மட்டுமன்றி தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சாதாரண நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து, தீவிர நோய்கள் போன்றவைகளால் பாதிக்கப்படும் நோயாளிகள் பெரும்பாலானோர் திருவாரூர் அல்லது தஞ்சாவூருக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், புதன்கிழமை மதியம் அரசு மருத்துவமனைக்கு இரண்டு குழந்தைகளுடன் வந்த தம்பதி, தோல்நோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனையில் பணியில் இருந்த ஆண் செவிலியர் பாபா ரகுராம் (36) என்பவரிடம் கேட்டுள்ளனர். அப்போது, தோல் வியாதிக்கு என்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனி மருத்துவர் இல்லை என்றும், பொது மருத்துவரிடம்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
     இதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. மோதலில், ஆண் செவிலியர் பாபா ரகுராம் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, ஆண் செவிலியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    தொடர்ந்து, இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
     விசாரணையில், செவிலியரைத் தாக்கியது மணல்மேடு, பூலோகநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் செந்திலை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai