Enable Javscript for better performance
இணையதள தோட்ட செயலி: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    இணையதள தோட்ட செயலி: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2019 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இ.தோட்டம் இணையதள செயலியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    விவசாயிகளுக்கு அதிக வருவாய் தரும் முக்கிய அங்கமாக தோட்டக் கலைப் பயிர்கள் உள்ளன. விவசாயிகளின் வாழ்க்கை தரம் மற்றும் வருமானத்தையும் உயர்த்துகின்றன. தோட்டக்கலை விளைபொருள்களை விற்பனை செய்வதை எளிமைபடுத்துவதற்காக இ-தோட்டம்  என்ற இணையதள செயலியை  தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் பதிவு செய்து பயன்பெறலாம்.
     விவசாயிகள் தங்களது பண்ணையிலுள்ள விளைபொருள்களின் விவரம், அளவு, விலை போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். வியாபாரிகளும் தோட்டக்கலை தொடர்பான பொருள்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். தோட்டக்கலை விளைபொருள்களைப் பெற விரும்பும் நுகர்வோர் இச்செயலியில் பதிவேற்றம் செய்து, தேவையான அளவு  விளைபொருள்களை நேரடியாக பெற முடியும். இச்செயலியின் மூலம் அரசு தோட்டக்கலை பண்ணைகளிலுள்ள பொருள்களின் நிலவரம் பற்றியும், விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். அனைத்து விளைபொருள்கள் மற்றும் ஆர்கானிக் பொருள்கள் ஆகியவற்றை இச்செயலியின் மூலம் விற்பனை செய்யலாம். மேலும் பொருள்களின் இருப்பு மற்றும் விலை ஆகியவற்றை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
    எனவே விவசாயிகள் இ- தோட்ட இணையதள செயலியில் தங்களின் விளைபொருள்களைப் பதிவுசெய்து பயன்பெற வேண்டும்  என தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai