Enable Javscript for better performance
இயற்கை பேரிடர் கால மீட்பு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் இயற்கை பேரிடர் கால மீட்புப் பணி தொடர்பான மூன்று நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
    வேதாரண்யத்தில் உள்ள ஒய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்கத்தின் வட்டாரத் தலைவரும், கஸ்தூர்பா காந்தி கன்யா குரு குலத்தின் நிர்வாக அறங்காவலருமான அ. வேதரத்னம் தலைமை வகித்தார். சங்கத்தின் கௌரவ தலைவரும் வட்டாட்சியருமான சண்முகம், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த், சங்கத்தின் வட்டாரச் செயலாளர் பொன்.தர்மதுரை, பயிற்றுநர்கள் பெஞ்சமின், ரமேஷ்குமார், ராஜாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். இப்பயிற்சி முகாமில்,செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள், வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி, செம்போடை ஆர்.வி. பொறியியல் கல்லூரிகளில் செயல்படும் மாணவர் செஞ்சிலுவை சங்கத்தினர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai