Enable Javscript for better performance
கடந்த 8 ஆண்டுகளில் சமூக நலத்துறை மூலம் ரூ.153.85 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கடந்த 8 ஆண்டுகளில் சமூக நலத்துறை மூலம் ரூ.153.85 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 25th July 2019 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில், சமூகநலத் துறை மூலம் கடந்த 8 ஆண்டுகளில் 34,447 பயனாளிகளுக்கு ரூ.153.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் வழங்கும் திட்டத்தில் 2011-2012- ஆம் ஆண்டில் பட்டம் மற்றும் பட்டயம் படித்த 647 ஏழைப் பெண்களுக்கு ரூ.3.23 கோடி நிதியுதவி, தலா 4 கிராம் தங்கம் வீதம் ரூ. 62.11 லட்சம் மதிப்பிலான தங்கமும், 10-ஆம் வகுப்பு படித்த 2,043 ஏழைப் பெண்களுக்கு ரூ 5.11 கோடி நிதியுதவியும், தலா 4 கிராம் தங்கம் வீதம் ரூ.1.96 கோடி மதிப்பிலான தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
     2012-2013- ஆம் ஆண்டில், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 1,320 ஏழைப் பெண்களுக்கு ரூ.6. 60 கோடி மதிப்பிலான நிதியுதவியும், 4 கிராம் தங்கம் வீதம் ரூ.1.27 கோடி மதிப்பிலான தங்கமும், 10-ஆம் வகுப்பு படித்த 2605 ஏழைப் பெண்களுக்கு ரூ 6.51 கோடி மதிப்பிலான நிதியுதவியும், ரூ. 2. 50 கோடி மதிப்பிலான தங்கமும்ம் வழங்கப்பட்டுள்ளது.
    இதேபோல், 2013-2014, 2014-2015, 2015-2016, 2016-2017, 2017-2018, 2018-2019 ஆகிய ஆண்டுகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 2011-2012 முதல் 2018-2019 வரையிலான நிதியாண்டுகளில் மொத்தம் 26, 966 ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக ரூ. 95.35 கோடி  மதிப்பிலான நிதியுதவியும், ரூ.39.78 கோடி மதிப்பிலான தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
     இதேபோன்று, முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  2014-2015 ஆம் ஆண்டில் 2,158 பெண் குழந்தைகளுக்கு ரூ.5.39 கோடி, 2015-2016 ஆம்  ஆண்டில் 1,255 பெண் குழந்தைகளுக்கு ரூ.3.14 கோடி, 2016-2017- ஆம் நிதியாண்டில் 1,475 பெண் குழந்தைகளுக்கு ரூ.3.69 கோடி, 2017-2018 ஆம் ஆண்டில் 1,382 பெண் குழந்தைகளுக்கு ரூ.3.45 கோடி 2018-2019 ஆம் நிதியாண்டில் 1,211 பெண் குழந்தைகளுக்கு ரூ.3.03 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 2014-2015 முதல் 2018-2019 வரையிலான நிதியாண்டுகளில் மொத்தம் 7,481 பயனாளிகளுக்கு ரூ. 18.71 கோடி மதிப்பிலான வைப்புத் தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai