Enable Javscript for better performance
சம்பா சாகுபடி விதைகள் போதியளவு இருப்பு: வேளாண் உதவி இயக்குநர்- Dinamani

சுடச்சுட

    

    சம்பா சாகுபடி விதைகள் போதியளவு இருப்பு: வேளாண் உதவி இயக்குநர்

    By DIN  |   Published on : 25th July 2019 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமருகல் ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து திருமருகல் வேளாண்மை உதவி இயக்குநர் க. சிவகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  திருமருகல் ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான நீண்ட கால நெல் ரகம் சி.ஆர். 1009, மத்திய கால ரகம் பி.பி.டி. ஆகிய நெல் ரகங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 
    தேவைப்படும் விவசாயிகள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் விதை கிராம திட்டத்தின்கீழ் மானிய விலையில் பெற்று பயன்பெறலாம்.
    நெல்லுடன் விதை நேர்த்தி செய்வதற்குரிய உயிர் உரங்கள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா பாக்கெட்டுகள், திரவ உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.
    இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai