Enable Javscript for better performance
சீர்காழியில் 300 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட  300 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி ஆய்வுக் குழுவினர் புதன்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
    சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் உத்தரவின்படி, சீர்காழி பழைய பேருந்து நிலையம், தேர் வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதாரஆய்வாளர் மோகன், வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
    அப்போது பெரும்பாலான கடைகளிலிருந்து 300 கிலோ வரை தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். அத்துடன், கடை உரிமையாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். மேலும், சீர்காழியில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் நெகிழி பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் எச்சரித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai