Enable Javscript for better performance
தலைமையாசிரியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கீழ்வேளூர் அருகேயுள்ள தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிக்கு தலா ரூ.100 வசூல் செய்ததை திரும்பித் தர வேண்டும். மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்காக பெறப்பட்ட ரூ.500-ஐ திரும்பத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேவூர் கடைத்தெருவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ஜி. ஜெயராமன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகை மாலி முன்னிலை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எ.சிவக்குமார், இந்திய மாணவர் சங்க ஒன்றியச் செயலாளர் அன்பு ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai