Enable Javscript for better performance
தேசிய கல்விக் கொள்கை கலந்துரையாடல் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கை குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பாலு  தலைமை வகித்தார். சீர்காழி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ராஜம், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கிள்ளை. ரவீந்திரன், ஆசிரியர் அகோரமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் புகழேந்தி, ஆசிரியர் எழிலரசன் ஆகியோர் வாழ்த்துரை
    வழங்கினர்.
    பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, புதிய கல்விக் கொள்கை 2019 குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் ஆசிரியர்கள் டோனி, பிரபு, சங்கர், ஸ்டாலின், ராஜா, இளங்கோ உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai