Enable Javscript for better performance
நாட்டுப்புறக் கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டுப்புறக் கலைஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு இசைப்பள்ளி அறிவித்துள்ளது. 
    இது குறித்து சீர்காழியில்  உள்ள மாவட்ட  அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் கலையரசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    கலை பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கி வரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோள்பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்காள் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன்- குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைசிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புற கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ்க் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
    மாவட்ட கலை விருதுகள்: 
    18 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருதும், 51 முதல் 60 வயதுக்குள்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 61 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படுகின்றன.  விண்ணப்பத்துடன் வயதுச் சான்று மற்றும் கலை தொடர்பான சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.
    நாகை மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும்  மாவட்ட கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. கலைஞர்கள் வியாழக்கிழமைக்குள் (ஜூலை 25) உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர்- 613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai