Enable Javscript for better performance
பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அருகே குமாரநத்தம் பாசன வாய்க்காலின் மதகை சீரமைத்து, தூர்வாரும் பணி அண்மையில் தொடங்கியது. 
    குமாரநத்தம் பாசன வாய்க்கால் மூலம் குமாரநத்தம், பனமங்கலம், புங்கனூர்,  மருதங்குடி, சட்டநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனிடையே குமாரநத்தம்  வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கம் சார்பில், ரூ.25 லட்சம் செலவில் வடிகால் மதகு சீரமைத்து, குமாரநத்தம் உபரி பிரிவு பாப்பானோடை வாய்க்கால் தூர்வாரும் குடிமராமத்துப் பணிக்கு பூமி பூஜை பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்றது. பாசனதாரர்கள் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் பாலு, பொருளாளர் சிவபெருமான், துணைத் தலைவர் சன்முகம் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பழைய மதகை இடித்து அப்புறப்படுத்தி, புதிய மதகு கட்டுவதற்கான அளவீடு செய்யும் பணியும், தூர்வாரும் பணியும் தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai