Enable Javscript for better performance
பாமக முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    கீழ்வேளூரில் பாமகவின் 31- ஆம் ஆண்டு தொடக்க விழா, கட்சியின் நிறுவனர் ராமதாசின் முத்து விழா மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி மாநிலங்களை உறுப்பினரானதற்கான  பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இந்நிகழ்ச்சிக்கு பாமக மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், பாண்டித்துரை, அசோக், நவீன், அரவிந்த், அர்ஜுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    மாநில துணைத் தலைவர் வேதமுகுந்தன், மாநில அமைப்பு துணைத் தலைவர் செம்பியூரான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆண்டு முழுவதும் ராமதாசின் முத்து விழாவை பள்ளி மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி கொண்டாடுவது, கீழ்வேளூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்சிக் கொடியேற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்நிகழ்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் பாமகவில் இணைந்தனர்.  புதுவை காளி நன்றியுரையாற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai