Enable Javscript for better performance
பேரிடர் கால மீட்புப் பணி பயிற்சி நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் தன்னார்வலர்களுக்கு மூன்று நாள்கள் அளிக்கப்பட்டு வந்த இயற்கை பேரிடர் கால மீட்புப் பணி தொடர்பான பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.
    ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில் நடந்து வந்த முகாமுக்கு, செஞ்சிலுவைச் சங்கத்தின் வட்டாரத் தலைவரும், கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தின் நிர்வாக அறங்காவலருமான அ. வேதரத்னம் தலைமை வகித்தார். முகாம் நிறைவில், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவு நாள் நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.உ.சண்முகம், மாவட்ட இணைச் செயலாளர் மல்லிகா வெங்கட்ராமன், வட்டாரச் செயலாளர்கள் பொன்.தர்மதுரை (வேதாரண்யம்), தங்க.மோகன்(கீழ்வேளூர்), பயிற்றுநர்கள் பெஞ்சமின், ரமேஷ்குமார், ராஜதுரை, ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஏ.நாகூரான் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பயிற்சி முகாமில், செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வலர்கள், வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி, செம்போடை ஆர்.வி. பொறியியல் கல்லூரிகளில் செயல்படும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai