Enable Javscript for better performance
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாட்டில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாநாட்டை சேதுமாணிக்கம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாநிலத்தலைவர் நெ.இல.ஸ்ரீதரன் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வ.பழனிவேலு, பொருளாளர் மா.பாலசுப்ரமணியன், நாகராஜன், மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சி.சிவசங்கரன், மாநில துணைத் தலைவர் து.கணேசன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் இமயவரம்பன், ஜாக் அமைப்பைச் சேர்ந்த த. ராயர் உள்ளிட்ட நிர்வாகிகள், வட்டத் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றினர்.
    இக்கூட்டத்தில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத்தலைவர் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    சங்கத்தின் புதிய மாவட்டச் செயலாளராக இரா. ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவராக வ.பழனிவேலு, பொருளாளராக மா.பாலசுப்பிரமணியன், மாவட்டத் துணை தலைவர்களாக ராமதாஸ், ஜெயக்குமார், கருணாநிதி, மாவட்ட இணைச் செயலாளர்களாக திருஞானசம்பந்தம், ஜெகத்ரட்சகன், கோவிந்தராஜன், வேம்பு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai